பரிதிமழை
சாரல், தூரல், பேய் மழை
Wednesday, January 25, 2012
மது அல்லது நிலவு அல்லது பால்யம்
மது
அருந்துகையில் தெரிந்தது
அம்மா காட்டி
சோறூட்டிய -என்
பால்யத்தின் நிலா.
எவ்வளவு முயன்றும்
எடுக்கமுடியவில்லை
எனது மதுவில்
தெரியும் நிலவை.
குட்டியைத் தூக்கும்
தாய் பூனையாய்
நிலவைப் புண்படுத்தாமல்
மதுவை மட்டும்
குடிக்க விழைகிறேன்.
மதுவுடன் சேர்ந்து
நிலவும் வயிற்றுக்குள்
போய்விடுகிறது.
அப்படியே
நிலவுக்குள் இருக்கும் பாட்டியும்
அவள் சுடும் வடையும்.
மீண்டும் மதுவை ஊற்றுகையில்
என் காலிக் கோப்பையை
நிலவும் சேர்ந்தே நிறைக்கிறது.
அப்படியே
நிலவுக்குள் இருக்கும் பாட்டியும்
அவள் சுடும் வடையும்.
கடைசி பத்தி பின்குறிப்பு
நீ
குளிக்காத
மூன்றாவது நாளில்
வரும் நாற்றம்
சகிக்கமுடியாதது.
எல்லோரையும் போல்
மலமும் மூத்திரமும்
கழிக்கும் உயிரி
நீ.
ஜலதோசத்தின் போது
உன் நாசியில்
ஒழுகும் சளியும்
அதை உறிஞ்சும்போது
எழும் சத்தமும்
ஒவ்வாதவை.
எனக்கிருப்பதைப் போல்
மூளையும் இதயமும்
இரத்தமும் சதையும்
கொண்ட சாதாரண மனுஷி நீ...
உன்னைச்
சாதாரண மனுஷி
என எழுதுவதற்குள்
ஆயிரம்சவுக்கடி வாங்கியது
என் ஆம்பிளைத்தனம்..
குளிக்காத
மூன்றாவது நாளில்
வரும் நாற்றம்
சகிக்கமுடியாதது.
எல்லோரையும் போல்
மலமும் மூத்திரமும்
கழிக்கும் உயிரி
நீ.
ஜலதோசத்தின் போது
உன் நாசியில்
ஒழுகும் சளியும்
அதை உறிஞ்சும்போது
எழும் சத்தமும்
ஒவ்வாதவை.
எனக்கிருப்பதைப் போல்
மூளையும் இதயமும்
இரத்தமும் சதையும்
கொண்ட சாதாரண மனுஷி நீ...
உன்னைச்
சாதாரண மனுஷி
என எழுதுவதற்குள்
ஆயிரம்சவுக்கடி வாங்கியது
என் ஆம்பிளைத்தனம்..
பேச்சுலரின் வார்த்தைகள்
வேலையில்லா
பேச்சுலர்களின் வாய்
கெட்டவார்த்தைகளால்
நிரம்பி வழிகின்றன
ஈழம் குறித்த
காணொலி பார்க்கையில்
ராஜபக்சேவுக்கு ஒரு கெட்டவார்த்தை
பெட்ரோல் இல்லாமல்
பாதியில் நிற்கும் வண்டிக்கு
அம்மா இல்லை என்றாலும்
அதே கெட்டவார்த்தை
குடை இல்லா நாளில்
பெய்யும் மழைக்கு
வேறொரு கெட்டவார்த்தை
விரக்தியின் போது-யாராவது
கடவுள் காப்பாற்றுவார் என்றால்
கடவுளையும் சேர்த்து ஒரு கெட்டவார்த்தை
காசில்லா போது
பசிக்கும் வயிற்றுக்கு உணவாய்
சில கெட்டவார்த்தைகள்
இப்படி
வாழ்கை கெடும்போதெல்லாம்
வார்த்தைகளும் கெடுகின்றன்
கடைசியில் ஒரு நாள்
பேச்சுலரும் கெட்டவார்த்தை
ஆகிவிடுகிறது.
Thursday, January 19, 2012
நாங்களும் புத்தகத் திருவிழாவுக்குப் போனம்ல...
மிகக் கோலகலமாக நடந்து முடிந்துள்ளது சென்னை புத்தகத் திருவிழா.கரும்பு கடிக்காமல் பொங்கலோ பொங்கல் எனக் கூவாமல் பொங்கல் இவ்வளவு மகிழ்ச்சியாய் கழிந்தது என்றால் மொத்த காரணமும் சென்னை புத்தகக் கண்காட்சி தான். புத்தகக் கண்காட்சி நடந்த செயின்ட் ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளியில் கால் வைத்த உடன் தோன்றியது "ஏலேய் இது எம்மண்ணு... இவிங்கே எம் மக்க" என்கிற நினைப்பு. இது தான் புத்தகத்தின் மேல் வெறி கொண்டு அலையும் அனைவருக்குமே தோன்றியிருக்கும். நிரைய மக்கள் கூட்டம். அதில் வாசகர்களை விட எழுத்தாளர்கள் தான் அதிகம். புத்தகக் கண்காட்சியில் நுழைந்த உடனே முதலில் அண்ணன் யுவகிருஷ்ணா எழுதிய அழிக்கப் பிறந்தவன் தான் வாங்கினேன்.நல்ல த்ரில்லர்.இதுவரை தமிழில் வந்த மட்டமான த்ரில்லரை மட்டுமே படித்து அலர்ஜி அடைந்திருக்கும் என் போன்றோர்க்கு பெரிய ஆறுதல். பின்பு ஒவ்வொரு கடையாக சுத்திப் பார்த்துக் கொண்டிருந்தேன். கடந்த நான்கு வருடங்கள் போல் இந்த வருடமும் பொன்னியின் செல்வன் தான் பெஸ்ட் செல்லர். ஏறக்குறைய எல்லா முன்னணி பதிப்பகங்களும் பொன்னியின் செல்வன் போட்டிருந்தார்கள்.
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் கடையை கடக்கும் போது கீழ்கண்ட உரையாடலைக் கேட்க நேர்ந்தது.
"ரெண்டு நாள்ல... 2000 புக்கு காலியாகிடுச்சண்ணே"
"என்ன புத்தகம்?"
"விலைப்பட்டியல் புத்தகம் தான்"
இதைக் கேட்டுக் கொண்டே நகரும் போது.இரண்டு இளைஞர்கள் பேசிக்கொண்டு வந்ததும் காதில் விழுந்தது.
"ஒவ்வொரு கடையிலும் இருக்கிற கேட்டலாக் (விலைப்பட்டியல்) வாங்கி எடைக்குப் போட்டாலே எப்படியும் பத்து கிலோவுக்கு மேல் தேரும்டா, ஒஸ்தி சரக்கே வாங்கலாம்"
முன்னணி பதிப்பகம் ஒன்றில் 64 பக்கத்துக்கு விலைப்பட்டியல் இலவசமாக எல்லோருக்கும் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். அதே அளவு கொண்ட மற்ற புத்தகங்கள் 50 முதல் 100 ரூபாய் வரை இருந்தது. விலைப்பட்டியலுக்குப் பதில் அந்தப் புத்தகங்களைக் கொடுத்திருந்தால் என்னைப் போன்ற ஏழை எழுத்தாளர்களாவது படித்து இன்புற்றிருப்பார்கள்.
வழக்கம் போல் இந்த முறையும் புத்தகத் திருவிழாவில் நிரைய புத்தகங்கள் வெளியிடப்பட்டன. சில ஆயிரங்கள் செலவழித்து நடத்துவதற்கு இது போன்று புத்தகத் திருவிழாவில் மக்கள் மத்தியில் வெளியிடுவது எவ்வளவோ மேல் என்று எழுத்தாளர் ஒருவர் சொல்லிக் கொண்டிருந்தார். ஞானி, மனுஷ்யபுத்திரன், போன்றவர்கள் தங்களது கடைகளில் உட்கார்ந்து கொண்டு வரும் வாசகர்களுக்கு கையெழுத்துப் போட்டுக் கொண்டும், அவர்களது கேள்விகளுக்கு பதில் அளித்துக் கொண்டும் இருந்தார்கள்.
பொன்னியின் செல்வனுக்கு அடுத்தபடியாக விற்றவை மணிமேகலைப் பிரசுர புத்தகங்கள் தான். குழந்தைகளுக்கு ஸ்நாக்ஸ் செய்வது எப்படி? அழகாய் ஆவது எப்படி? போன்ற நிரைய புத்தகங்கள் பரபரப்பாக விற்றது. எப்போதுமே கூட்டமாகவே காணப்பட்டதால் மணிமேகலை பிரசுரத்துக்குள் நுழையவே முடியவில்லை. "எப்படி என்கிற கேள்வி இருக்கும் வரை மணிமேகலை பிரசுரம் இருக்கும்." என்கிற நண்பரின் கருத்து மறுக்க முடியாத ஒன்று.
நல்ல விற்பனையான இன்னொரு புத்தகம் சு.வெங்கடேசன் எழுதி சாகித்ய அகாடமி பரிசு பெற்ற காவல் கோட்டம்.தமிழினி பதிப்பகக் கடையிலேயே உட்கார்ந்திருந்தார் அவரைத் தெரிந்தவர்கள் மட்டும் கையெழுத்து வாங்கிக் கொண்டு போனார்கள்.இளைஞர்களின் கனவு நாயகன் கவாஸ்கர் கூட இரண்டு வாங்கிக்கொண்டு கிளம்பினார்.
குழந்தைகளுக்கான புத்தகங்கள் போனமுறையை விட இந்த முறை அதிகரித்துள்ளதாகவே தோன்றியது. அதில் குறிப்பிடவேண்டியவை செம்பருத்தி,புக்ஸ் ஃபார் சில்ட்ரன்,யுரேகா. அதிலும் செம்பருத்தி வெளியிட்ட அண்ணன் அஜயன் பாலா அவர்களின் புத்தகம் 1000 குழந்தைகளின் கருத்தைக் கேட்டு அதற்கு ஏற்ப வடிவமைக்கப் பட்டிருந்தது என்பது சிறப்பு.புத்தகத் திருவிழாவில் யூமா வாசுகியின் ஏழு சிறுவர் நூல்கள் வெளியானது.அதில் ஒரு நூலை என்னைப் பெற்றுக் கொள்ளச் செய்த தோழர் ஜி.நாகராஜன் அவர்களுக்கு நன்றிகள். சந்தித்த பதினைந்து நிமிடங்களிலேயே எனக்குள் ஒரு பெரும் மதிப்பை ஏற்படுத்திவிட்டார்.யூமா வாசுகி. குழந்தைகளை அதிகமாக ஈர்த்தவை கார்ட்டூன் சிடிகள். நல்ல தமிழ் பாடல்களை கார்ட்டுன் பொம்மைகள் பாடி ஆட அதைப் போலவே ஆடிப் பாடிக்கொண்டிருந்தன மனித பொம்மைகள்.
இன்னொரு பக்கம் உங்களது குழந்தைகளின் ஐ.கியூ வை வளர்க்க எங்கிற ஆங்கிலத் தட்டி வைத்து 0-5 வயதுக்குள் உள்ள உங்கள் குழந்தையை அறிவுடையவர் ஆக்குவோம் என்று அங்கே வேலை பார்த்துக் கொண்டிருந்தவர்கள் பெற்றோர்களிடம் விளக்கிக் கொண்டிருந்தனர். மூன்று வயது மகனிடம் அட்வெஞ்சரஸ் என்கிற வார்த்தையைப் படிக்கச் சொல்லிக் கேட்டுக் கொண்டிருந்தார் ஒரு அம்மா.
எஸ்.ரா வின் இலக்கிய பேருரை சீடியும் சக்கை போடு போட்டது.ஏழு பேர் சேர்ந்து மொத்தமாக வாங்குபவர்கள்,ஏற்கனவே வாங்கியவர்களிடம் காபி பண்ணிக்கொள்ளலாம் என்கிற நினைப்பில்
இருப்பவர்கள் ஆகியவர்களையும் கடந்து சீடி நன்றாய் போனதாய் கேள்விப்பட்டேன்.
தமிழ் காமிக்ஸ் கடையைத் தேடி நாயாக அலைந்த போது.எல்லோரும் சொன்னவை "தமிழில் காமிக்ஸ் அழிந்துவிட்டது.ஆங்கிலக் காமிக்ஸ் தான் கிடைக்கும்" . கடைசியில் இருந்த ஒரே ஒரு காமிக்ஸ் கடையைத் தேடிக் கண்டு பிடித்த போது அங்கே இருந்த காமிக்ஸ் புத்தகங்கள் எல்லாம் ஆக்ஷன் காமிக்ஸாகவே இருந்தன.எல்லாவற்றிலும் டமால்,, டுமீல்... படார்... என்றே இருந்தது... மிகவும் நொந்து போனதில் அடுத்த புத்தகத் திருவிழாவுக்குள் ஒரு சண்டை இல்லாத இயல்பான தமிழ் காமிக்ஸை கொண்டு வரவேண்டும் என்கிற சபதம் நெஞ்சில் ஏறியது.(ஆர்வம் உள்ள ஓவியம் வரைய தெரிந்த நண்பர்கள் தொடர்பு கொள்ள்லாம்). தலைவர் அதிஷாவையும் ஒரு காமிக்ஸ் புத்தகம் எழுத வேண்டிக் கொண்ட போது.. அவர் யூமா வாசுகிக்கு போட்டியாக குழந்தை எழுத்தாளர் ஆகப் போவதாக சங்கல்ப்பம் எடுத்தார். அடுத்த கண்காட்சியில் செம்பருத்தியில் அதிஷாவின் குழந்தை கதைகள் என்கிற தலைப்பில் புத்தகம் காணக் கிடைக்கலாம்.
திரு.இரா.நடராஜன், அசோகமித்ரன்,அப்துல் ரகுமான் என நான் படித்து வியந்தவர்களை நேரில் பார்க்கும் போது ஏற்பட்ட உணர்வை எழுத முடியாது.இயக்குனர்கள் பாலாஜி சக்திவேல், ராம், சசிக்குமார், அகத்தியன்,பாலுமகேந்திர போன்ற சினிமாகாரர்களையும் அங்கே காணமுடிந்தது.
இருப்பதிலேயே அதிகமான கூட்டம் நொருக்குத்தீனி மற்றும் சாப்பாட்டுக் கடையில் தான்.சிலர் பெருமைக்காக வேண்டும் என்றே இரண்டு கை நிரைய புத்தகங்களை அள்ளிக் கொண்டு வந்தார்கள். ஹைகூ கவிஞர் மு.முருகேஷ் அவர்களது கடையில் உட்கார்ந்திருந்த போது அந்தக் கடைக்குள் நுழைந்த தன் மனைவியை தடுத்து "உனக்கு சமையல் புத்தகம் தான் வாங்கித் தருவேன். படிச்சிட்டு நல்லா சமச்சுப் போடு" என்று கூட்டிச் சென்றதைக் கேட்டு தலையில் அடித்துக் கொண்டார் மு.முருகேஷ். மு.முருகேஷ், கவிஞர் அ.வெண்ணிலாவின் கணவர். அ.வெண்ணிலா எழுதப் போகும் நெசவு பற்றிய நாவலுக்கு உறுதுணையாக அவருடன் சேர்ந்து நெசவு மண்ணில் தங்கப் போகும் அற்புதக் கணவன் என்பது குறிப்பிடத்தக்கது.
நேருக்கு நேர் என்கிற நிகழ்ச்சியில் ஒவ்வொரு நாளும் ஒரு எழுத்தாளருடன் வாசகர்கள் சந்திப்பு நிகழ்த்தியது நன்றாக இருந்தது. வாசகர்களின் அபத்தமான கேள்விகளுக்கு கூட எழுத்தாளர்கள் அமைதியாக பதில் அளித்தார்கள்.இந்த சந்திப்புகளில் கலந்து கொண்ட ஒரே ஒரு பெண் எழுத்தாளர் பாமா மட்டும் தான். இன்னும் இரண்டு பெண் படைப்பாளிகளையாவது அழைத்திருக்கலாம் என்று தோன்றியது.
கவிஞர்.அ.வெண்ணிலா அவர்கள் பதிப்பித்த இந்திய சரித்திரம் என்கிற 8 தொகுதிகள் அடங்கிய நூல் மிகவும் முக்கியமான நூல். 140 ஆண்டு உலக, தமிழக, இந்திய வரலாறு அடங்கியது. அந்நூலை பா.சிவனடி எங்கிற தனிமனிதனாய் உட்கார்ந்து எழுதியுள்ளார். அவரது புகைப்படம் கூட கிடைக்கவில்லை என்பது கவலையான விசயம். அந்த ஒரு நூலை வாங்குவதற்காகவே நெசவுத் தொழிலாளி ஒருவர் தன் மகனுடன் வெகுதூரத்தில் இருந்து வந்தார்(ஊர் மறந்துவிட்டது). இது போன்ற ஆட்கள் இருப்பதனால் தான் புத்தகங்கள் வாழ்கின்றன..
எனக்கு தனிப்பட்டு நிரைய நண்பர்களை அறிமுகப் படுத்தியது இந்தப் புத்தகத் திருவிழா.பூ.கோ. சரவணின் காசில் இரண்டு புத்தகங்களை லபக்கிக்கொண்டேன்.அவர் பேசியதை பொறுமையாகக் கேட்டதற்கு அவர் இன்னும் ஐந்து புத்தகங்கள் பரிசளித்திருக்கலாம். முதல் இரண்டு நாட்கள் என்னுடன் சுத்தியதாலோ என்னவோ காச்சல் கண்டு படுத்த மதன் செந்தில் பிறகு புத்தகத் திருவிழாவுக்கு வரவே இல்லை.
இம்முறை நாவல் மட்டுமே வாங்கிக் கொண்டிருந்தேன்.அசடன், கரமசோவ் சகோதரர்கள் எல்லாம் வாங்கலாம் என் ஆசைப்பட்டாலும் நான் அம்பானி அல்லாத காரணத்தால் வாங்கமுடியாமல் போயிற்று.
பாரதி புத்தகாலயத் தோழர் ஒருவர் போஸ்டர் ஒன்றை பரிசளித்தார்.அதில் எழுதியிருந்தவையைக் குறிப்பிட்டு இக்கட்டுரையை முடிக்கலாம் என நினைத்தேன்.
"தனிமைத் தீவில் தள்ளப்பட்டால் என்ன செய்வீர்கள்?" என்கிற கேள்விக்கு "புத்தகங்களுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்துவிட்டு வருவேன்"என்று பதிலளித்தார் ஜவகர்லால் நேரு.
"என் கல்லறையில் மறக்காமல் எழுதுங்கள்,இங்கே ஒரு புத்தகப் புழு உறங்குகிறதென்று"என்றார் பெட்ரண்ட் ரஸல்.
மனிதனின் ஆகப் பெரிய கண்டுபிடிப்பு எது என்று வினவப்பட்டபோது யோசிக்காமல் "புத்தகம்" என பதிலளித்தார் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்.
"கரண்டியை பிடுங்கி விட்டு புத்தகங்களைக் கொடுத்தால் போதும்" என்றாராம் தந்தை பெரியார்.
"வேறு எந்தச் சுதந்திரமும் வேண்டாம். சிறையில் புத்தக வாசிப்பை மட்டும் அனுமதிக்க வேண்டும்" என்றாராம் நெல்சன் மண்டேலா.
பிறந்த நாளுக்கு என்ன வேண்டும் என நாடு கேட்ட போது புத்தகங்கள் என சற்றும் தயங்காமல் லெனின் கூறிட குவிந்த புத்தக்ங்கள் பல லட்சம்.
ஒவ்வொரு படமும் நடிக்க ஒப்புக் கொள்ளும் போது முதல் நூறு டாலருக்கு புத்தகம் வாங்குவாராம் சார்லி சாப்ளின்.
"ஒரு குழந்தைக்கு நீங்கள் வாங்கித் ட்ஹரும் ஆகச் சிறந்த பரிசு புத்தகங்கள் தான்" என்றார் வின்ஸ்டன் சர்ச்சில்.
"ஒரு கோடி ரூபாய் கிடைத்தால் என்ன செய்வீர்கள்" என்கிற கேள்விக்கு "நூலகம் கட்டுவேன்" என்றார் காந்தி.
பயங்கரமான போராட்ட ஆயுதங்கள் எவை என கேட்ட போது புத்தகங்கள் தான் என்றார் மார்டின் லூதர் கிங்.
தான் தூக்கிலிடப்படுவதற்கு ஒரு நிமிடம் முன்பு வரை வாசித்துக் கொண்டே இருந்தாராம் பகத்சிங்.

Friday, December 30, 2011
கத்தி
மானுடராய்ப் பிறந்த
எல்லோரிடமும் ஒரு கத்தி இருக்கிறது.
அவரவர் வசதிக்கு ஏற்ப
சிறிதாகவோ பெரிதாகவோ
கூராகவோ மொன்னையாகவோ
புதிதாகவோ பழையதாகவோ
எப்படியோ
ஒவ்வொருவரிடமும் ஒரு கத்தி இருக்கிறது.
ஒட்டு மொத்த வர்க்கத்துக்கு
வழங்கப்பட்ட கத்தியை பயன்படுத்தி
நமக்குள் குத்திக் கொண்டு
எதிராளியுடன் சேரவே விரும்புகிறோம்
நண்பன் குத்துகையில் 'துரோகி' என்றும்,
காதலி குத்துகையில் 'தேவடியா' என்றும்,
கொப்பளிக்கும் நாம்.
நாம் பிரயோகிக்கும் போது மட்டும்
'சூழ்நிலை' எனச் செப்புகிறோம்.
நம்மை
கத்தியை வெறுக்கும் அஹிம்சாவாதியாகவும்
அடையாளப் படுத்திக்கொள்ளவும் முயல்கிறோம்.
நம்மிடம் இருக்கும் கத்தியை வைத்து
ஆப்பிள் வெட்டலாம்
மயிரைச் சரைக்கலாம்
எனச் சொல்லித் தரும்
சமூகத்தின் காட்டு இரச்சலில்
"களையும் எடுக்கலாம்"
என்கிற குரல் தூரத்தில் சன்னமாக ஒலிக்கிறது.

Wednesday, December 21, 2011
தோழமைக் கதைகள் -2
தோழன் எனும் ராட்சஸன்
அவனைப் பார்த்த முதல் நாள் எல்லாம் எனக்கு நினைவில் இல்லை.இதுவரை மொத்தம் 20 வருடம் மட்டுமே வாழ்ந்திருக்கும் இந்தச் சின்ன பையனின் வாழ்க்கையில் 11 வருடங்களைத் தன் நட்பினால் நிரப்பி ஓடவிட்டவன்,அவன். அவனை நினைக்கும் போதெல்லாம் நான் சிரிக்காமல் இருந்ததே இல்லை.ஆனாலும் அவனைப் பார்க்கையில் எல்லாம் எனக்குள் ஒரு குற்ற உணர்வு ஓடிக் கொண்டேயிருக்கும். பொதுவாய் பெற்றோர்கள் தங்களது கனவுகளை பிள்ளைகளின் மீது திணித்து அவர்களது வாழ்க்கையை கெடுப்பது வழக்கம். அதே வேலையை நான் அவனுக்குச் செய்திருக்கிறேன். இருவரும் எதையாவது பற்றி பேசும் போதும் சினிமாவை வைத்தே பேசுவோம். சூரியன் மஞ்சளாய் தெரியும் போது இந்த லைட்டிங்க்ல ஹீரோயின் இன்ட்ரோடக்ஷன் இருந்தா சூப்பரா இருக்கும்ல என்பான். எனது சினிமா கனவை என்னால் தொடரமுடியாது என ஏதோ ஒன்று எனக்கு உணர்த்த அதை அவனது மண்டையில் ஊற்றிவிட்டேன். ஐந்தாம் வகுப்பில் இருந்து சினிமா பற்றிய ஆசைகளை நான் வளர்த்து விட்ட காரணத்தால் கல்லூரியில் சேரும்போது விஸ்காம் சேரப் போகிறேன் என அவன் வீட்டில் அடம் பிடித்தான் .(இத்தனைக்கும் +2 வில் கணக்கில் 199 /200)
பின் வழக்கம் போல் எல்லா மகன்கள் மாதிரி இஞ்சினியரிங்கே எடுத்து படித்துக் கொண்டிருக்கிறான்.ஆனாலும் அவனது சினிமா ஆசை இதுவரை குறையவில்லை நானும் எனது கதைகளை எல்லாம் அவனுக்கு தந்து படம் எடுக்கச் சொல்வேன். அவன் ஒவ்வொரு படம் எடுக்கும் போதும்என்னதான் நாம் விழுந்து விழுந்து வேலை செய்தாலும் "அவர் சின்சியர் தைங்க்ஸ் டு" என்று அப்போது அவனுக்கு இருக்கும் கேர்ள் ஃப்ரெண்ட் பேரைப் போடுவான் அதை மட்டும் பொறுத்துக் கொள்ளவேண்டும். டைரக்ஷனைப் பற்றி எதுவும் எனக்குத் தெரியாது என்றாலும் அவன் படம் எடுக்கும் போதெல்லாம் கண்டிப்பாக நான் இருக்கவேண்டும். ராத்திரி பதினொரு மணிக்கு அழைத்து "மாப்ள கிளாசா ஒரு ஸ்டோரி பண்ணனும் டா" என்பான். திடீரென அழைத்து "வெயிட்டா ஒரு கதை வச்சிருக்கேன் கேக்குறியா?" என கதை சொல்வான். காரித் துப்புவது போல் கதை இருக்கும். அதை நான் அதற்கு மேல் கழுவி கழுவி ஊத்துவேன். அவன் கோபித்துக் கொள்வான் என்று எனக்கு எப்போதும் பயம் கிடையாது. இதை வைத்து அவன் கோபப்படாத சாந்தமானவன் என்று நினைத்துக் கொள்ளவேண்டாம். சரியான தொட்டாச் சிணுங்கி எதற்கெடுத்தாலும் கோபித்துக் கொள்வான் என்பதால் தான் நான் அவனது கோபத்தைப் பெரிது படுத்த மாட்டேன். இது வரை அவனுடன் போன் பேசி கெட்டவார்த்தையில் திட்டு வாங்காமல் இருந்தது இல்லை. அவன் திட்டவில்லை என்றாலும் அவனை கடுப்பேற்றி திட்டுவாங்குவேன். அவனை கடுப்பேற்றுவது ரொம்பவும் சுலபம் நான் ஒரு அழகான பெண்ணிடம் இன்று பேசினேன் என்று சொன்னால் போதும்.ஊடல் என்பது காதலில் மட்டுமல்ல நட்பிலும் இன்பம் பயக்கும்.அவன் எனக்கு வாங்கித் தராமல் அவனது கேர்ள் பிரண்டுக்கு எதாவது வாங்கித் தந்தால் நான் கோபித்துக் கொள்வேன்.சமாதானம் பண்ணத் தெரியாமல் அவன் அல்லாடுவது பயங்கரமான குஷி கிளப்பும்.
ரொம்ப வெகுளி.நான் சொல்வதை எல்லாம் அப்படியே நம்பும் ஒரே ஜீவன் (பொய் என்று தெரிந்தாலும்).பள்ளி நாட்களில் ஒரு பெண்ணும் நானும் காதலிப்பதாகவும் பார்க்கு பீச்சு என்று சுத்துவதாகவும் சொல்லி கடுப்பேற்றுவேன் (தேனியில் பீச்சே இல்லை என்பதலாம் வேறு விசயம்) அதை நம்பி அவனும் ஒரு பெண்ணை காதலித்து அவன் அப்பாவிடம் மாட்டி பெல்ட் அடி வாங்கி கை கால் எல்லாம் வீங்கி வந்தபோது அவனுக்கு மிகுந்த ஆறுதலாய் நான் இருந்தாலும் உள்ளுக்குள் எழுந்த பயங்கரச் சிரிப்பை என்னால் கட்டுபடுத்த முடியவில்லை.அவனது இரண்டாவது காதல் தோல்வியைப் பற்றி தோழி(அவளும் ஒருவனுடன் காதலில் இருக்கிறாள்) ஒருத்தியிடம் அவன் சோகமாகச் சொல்லிக் கொண்டிருந்த போது எனக்கு எழுந்த சிரிப்பைப் பார்த்து அவனுக்குத் தெரியாம் அவள் என்னை கண்ணால் அடக்கினாள்.அவன் மேல் எனக்கு எப்போதும் ஒரு பொறாமை உண்டு. நான் சொன்ன பொய் கதையை கேட்டு காதலித்த அவனுக்கு இரண்டு லவ் பெயிலியர் ஆகிவிட்டது (இரண்டுமே டபுள் சைட்) ஆனால் நான் இன்னும் கதை மட்டுமே சொல்லிக் கொண்டிருக்கிறேன்.
எதாவது மகிழ்ச்சியான விசயம் என்றால் அவனுக்குத் தான் கடைசியாகச் சொல்லுவேன்.துக்கமான விசயம் என்றால் அவனுக்குத் தான் முதலில் சொல்லுவேன். நான் நிரைய அழுவேன் ஆனால் யாருக்குமே அது தெரியாது. நான் அழுததைக் கேட்ட ஒரே நண்பன் அவன் மட்டும் தான்.சிற்றிதழ் ஆரம்பித்த சமயம் இதழ் மிகவும் மோசமாக வந்திருந்தது. அதனால் இதழையே நிறுத்தும் அளவுக்கு சென்றுவிட்டது.அன்று உதிர்த்த கண்ணீரை வார்த்தைகளால் துடைத்தவன்.இன்றும் அந்த சிற்றிதழுக்காக உழைத்துக் கொண்டிருக்கிறான்.
" நீ தான் கதை, திரைக்கதை, வசனம் எல்லாம் எழுதுற பிறகு ஏன் அவன் டைரக்ட் பண்ண சொல்ற நீயே பண்ணா தான் நீ கெத்த்துனு காமிக்க முடியும்" என தோழி ஒருத்தி கேட்டதற்கு நான் கூறியவற்றை இங்கே எழுதப் போவதில்லை.எழுதினாலும் அதை எல்லாம் அவன் நம்பப் போவதும் இல்லை. அவனுக்கு நான் எவ்வளவு முக்கியம் என்று எனக்குத் தெரியும்.எனக்கு அவன் எவ்வளவு முக்கியம் என்று அவனுக்குத் தெரியும்.
இந்த பதிவுடன் அவனும் நானும் சேர்ந்து எடுத்த புகைப்படத்தைப் போடலாம் எனத் தேடும் போது தான் தெரிகிறது இதுவரை நானும் அவனும் சேர்ந்து நின்று ஒரு படமும் எடுத்ததில்லை என்று. நினைவுக்காகத் தான் நாம் படம் எடுத்துக் கொள்கிறோம்.அவன் எப்போதும் நினைவில் இருக்கிற காரணத்தால் தான் படமே எடுக்கவில்லை போலும்...
Monday, November 28, 2011
உப்புச்சப்பாணி
"இந்தப் பையனையும் விளையாட்டுல சேத்துக்கங்க"
"அக்கா இவன் ரொம்பச் சின்னப் பையன் அக்கா"
"உப்புச்சப்பாணிக்கு சேர்த்துக்கங்கப்பா"
அம்மா என்னை புதுசாய் குடிவந்த ஊரில் உள்ள என்னைவிட மூத்த பையங்களோடு சேர்த்து விட்டார்.
உப்புச்சப்பாணி என்பது என்ன என்று சில நகர்புற் நண்பர்களுக்கு விளக்கவேண்டியுள்ளது. எடுத்துக் காட்டுக்கு உப்புச் சப்பாணி என்பவரை கடவுளாகவும் விளையாட்டை வாழ்க்கையாகவும் வைத்துக் கொள்ளலாம் (வாழ்க்கையே கடவுளின் விளையாட்டுத்தானே என தத்துவம் எல்லாம் பேசாமல் நான் எழுதியதை தொடர்ந்து படிக்கவும்).உப்புச் சப்பாணியால் விளையாட்டுக்கு எந்த விளைவும் ஏற்படாது.அதே போல் உப்புச் சப்பாணிக்கும் எந்த விளைவும் ஏற்படாது.சிலர் உப்புச்சப்பாணிகளை வைத்து பிழைத்துக் கொள்வார்கள் நம்மூர் சாமியார்கள் மாதிரி.ஒரு சிறு வித்தியாசம் உப்புச் சப்பாணிகள் அங்கிட்டு இங்கிட்டும் ஓடிக் கொண்டிருப்பார்கள்.
உப்புச் சப்பாணி என்கிற வார்த்தை ஒப்புக்குச் சப்பாணி என்கிற வார்த்தையில் இருந்து வந்ததாக அறிகிறேன்.'ஒப்புக்கு' 'உப்புக்கு' ஆகி பின் உப்பாகிவிட்டது.சப்பாணி என்கிற வார்த்தையின் மூலம் தேடிப்போனால் பதினாறு வயதினிலே படத்தின் கமலஹாசனிடம் இருந்து வந்தது எனவும் எங்கள் ஊரில் இருந்து தான் படத்துக்கு வந்தது எனவும் இரண்டு தகவல்கள் கிடைக்கின்றன.(பாரதி ராஜா எங்கூர்காரர்) . எது எப்படியோ உப்புச் சப்பாணி என்பவர் டம்மிபீஸ் ஆனால் அவரை பயன் படுத்திக் கொள்ளமுடியும்.இது தான் டெபனிஷன்.
உதாரணத்திற்கு ஐஸ்பாய் போன்ற விளையாட்டுகளில் "வாரேன் வருகிறேன் திருப்பிச் சொன்னா வரமாட்டேன்" என்று கத்தி விட்டு பட்டு வருபவன்,எங்கு இருந்து எங்கு செல்கிறான்.யார் யார் எல்லாம் அகப்பட்டிருக்குறார்கள் போன்ற தகவல்களை உப்புச்சப்பாணிகள் மட்டுமே சேகரித்துவரமுடியும். இது போன்ற ஒற்றறிதலில் நான் புலி என்பதால் நான் தான் விருப்பத்துக்குறிய உப்புச் சப்பாணி.அதே போல் பட்டு வருபவன் உப்புச் சப்பாணியை கண்காணித்தால் எல்லோரையும் கண்டு பிடித்துவிடலாம்.இப்படி எல்லாவற்றுக்கும் உதவும் சாதக பாதகம் நிறைந்தவனே உப்புச் சப்பாணி.அவன் நினைத்தால் பலரை சிக்கவைக்க முடியும் ஆனால் அதனால் அவனுக்கு எந்த பிரயோஜனமும் இருக்காது. (நாம கூட கலைஞருக்கு ஆப்பு வச்சோம். நமக்கு எதாவது நடந்ததா அது மாதிரி...)
எங்கள் ஊரில் கிரிக்கெட் ஆடுகையில் 'ட்ரெயல்','ஓப்பனிங்க் ட்ரெயல்','பேட்ஸ்மேன் ட்ரெயல்','பவுளர் ட்ரெயல்' ,'பீல்டர் ட்ரெயல்','கீப்பர் ட்ரெயல்', என ஒரு ஓவர் சும்மா போடுவார்கள்.இந்த ஒரு ஓவரையும் உப்புச் சப்பாணிகள் தான் பேட் பண்ணுவார்கள்,அவர்கள் தான் பவுள் பண்ணுவார்கள்.இந்த ஒரு ஓவர் விளையாண்டதற்காக பந்து நாட் ரன் போகும் போதெல்லாம் ஓடி எடுக்கவேண்டிவரும்.ஓட்டுப் போடும் போது தேர்தலுக்கு முன்னாடி காசி வாங்கிக் கொண்டு பின்பு அஞ்சு வருசம் அல்லல் படுவோமே அது மாதிரி,ஒரு ஓவருக்கு ஆசைப் பட்டு பின்பு ஓடி ஓடி தேய்ந்துவிடுவோம்..
அரசாங்கத்திடம் அனுமதி வாங்கி அதற்கு பாதிப்பு வராத அளவுக்கு இடியென போர் முழக்கம் விடுவோம் அல்லவா அதே மாதிரி "எவ்வளவு தூரம் ஓடிப்போய் பந்த எடுத்தேன் தெரியுமா? ஒரு பால் சேர்த்து போடுங்க"என சீனியர்களுக்கு கோபம் வராத அளவுக்கு எதிர்த்து பேசவும் உப்புச்சப்பாணிகள் அனுமதிக்கப் படுவார்கள். அந்த கோரிக்கை சீனியர்களை பாதிக்கவில்லை என்றால் நிறைவேற்றுவார்கள்.(சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேத்தின மாதிரி...).சில சீனியர்கள் போனா போகுதுனு அவங்களாவே உப்புச் சப்பாணிகளை கூப்பிட்டு ஒரு பந்து போடுவங்க (பஸ்ல 50 பைசா குறஞ்ச மாதிரி)
இந்த உப்புச்சப்பாணிகள் எல்லா சிறுவர்களின் விளையாட்டிலும் இருப்பார்கள் எனச் சொல்ல முடியாது.ஆனால் நமது வாழ்வில் உறவினரிடமோ ,நண்பரிடமோ,அலுவலகத்திலோ,கல்லூரியிலோ,அரசியலிலோ ஏதேனும் ஒரு வகையில் உப்புச்சப்பாணியாகவே நாம் இருக்கிறோம்.

Wednesday, November 23, 2011
தோழமைக் கதைகள் -1

தோழி எனும் தேவதை
"இனிமேல் உனக்கு கஷ்டம்னாலும் சந்தோஷம்னாலும் எங்கிட்ட சொல்லு, இப்போ இருந்து நான் உன் ஃப்ரெண்ட்"இது தான் அவள் என்னிடம் நேரடியாக பேசிய முதல் நாளில் கடைசியான வார்த்தைக்ள்.அவள் என்னைத் தன் நண்பன் என்று சொல்வதற்கு முன்பே என் சுக துக்கங்களில் பங்கெடுக்க முடிவெடுத்திருக்கிறாள் என அப்போது தெரியவில்லை.அவ்வப்போது சிக்கன சிரிப்பை மட்டும் உதிர்த்துச் செல்வாள்.நானும் அவளுடன் நெருங்கிப் பழகவில்லை பொதுவாகவே எல்லோருடனும் தோழமையுடன் பழகினாலும் என்னை புரிந்த நண்பர்கள் குறைவு.12 வருட பள்ளி வாழ்க்கையில் மூன்று பேர்தான் என்னை 50% புரிந்தவர்கள்.
பிறகு சின்ன சந்தோஷங்களையும் துக்கங்களையும் அவளுடன் பகிர்ந்து கொள்ள ஆரம்பித்தேன்.பின்பு ஒரு நாளில் அவளே எனக்கு சந்தோஷமாகவும் துக்கமாகவும் மாறிப் போனதை உணர்ந்தேன்.சில துரோகங்களால் உடைந்து போயிருந்தபோது அவளே என்னை சேர்த்து ஒட்ட வைப்பாள் .நான் தேறி முடித்த அடுத்த நொடி "அவங்க உனக்கு அப்படி பண்ணியிருக்க கூடாது"என்று உடைந்து அழுவாள்.என்னுடைய எவ்வளவு பெரிய பிரச்சனைகளையும் சாமானியமாக உடைத்து எறிவாள்.
"இனிமே எனக்கு கவிதையே வராது..."என விரக்தியில் அழுதபோது "நீ சொல்றது மீன் குஞ்சு தண்ணில விழுந்து சாகப் போறேன்னு சொல்ற மாதிரி இருக்கு"எனக் கூறி சிரிக்க வைத்தவள்,"தங்கச்சி என்னைத் திட்டிட்டா"என மூன்று மணி நேரம் அழுவாள்.
ஓட்டப் பந்தயத்தில் ஓடி விழுந்து முட்டி தேய்ந்து இரத்தம் வழிந்ததனால் தோற்ற போதும் "நான் ஜெயிச்சிருக்கனும் மச்சி"எனும் சொல்லுபவள்."ராத்திரி எல்லாம் கண் முழிச்சு படிச்ச இல்ல அதனால தான் தூக்க கலக்கத்துல பெயில் ஆகிட்ட..."என்பாள்.
குச்சி ஐஸ் சாப்பிடயில் முக்கில் ஒட்டியிருக்கும் ஐஸை,சரியாக இன் பண்ணாத சட்டையை, கலைந்திருக்கும் தலைமுடியை,கூன் விழுந்த நடையை என எல்லாவற்றையுமே சைகையினால் சரி செய்வாள்.எனக்கும் அவளுக்கும் நடந்த பெரும் சண்டையில் "நீ எனக்குத் தேவை இல்லை, போய் எங்கிட்டாவது விழுந்து செத்துரு" என அனுப்பிய என் குறிஞ்செய்திக்கு. எதுவும் எழுதாத எஸ்.எம்.எஸ் ஒன்றை அனுப்பி என்னை மவுனத்தால் அடித்தவள்.
"மேடம் கொடுத்த அசைன்மென்ட்ல இருக்க படம் எல்லாம் ரொம்ப கஷ்டமா இருக்கு.எனக்கு வரையவே மூணு மணி நேரம் ஆச்சு.உன்ன நினைச்சுப் பாத்தேன் அதான் உனக்கும் வரஞ்சு எடுத்துட்டு வந்தேன்.எழுது அது மட்டும் போதும், ஆனா இது தான் கடைசி இனிமேல் பண்ணமாட்டேன்"என்பாள். "இது தான் கடைசி" என்று
ஒவ்வொரு முறையும் சொல்லுவாள். நானே வரைந்து எடுத்துப் போகும் படங்களைப் பார்த்து "எரும படம் கூட ஒழுங்க வரயத் தெரியல" எனச் சொல்லி நோட்டை பிடுங்கி அவள் வரைந்து தருவாள்.
நாங்கள் இருவரும் காதலிக்கிறோம் என எல்லோரும் கிசுகிசுக்கும் போது "உங்க அம்மா மேல் உனக்கு இருப்பது காதல்னா நான் பரிதியை காதலிக்கிறேன்னே வச்சுக்கங்க"என்று சொல்லி எல்லோர் வாயையும் அடைத்தவள். ஏதாவது மொக்கையான கவிதை எழுதும் போது "பரிதியையும் பைத்தியக்காரனையும் தவிர எவனாலையும் இப்படி யோசிக்க முடியாது"என்பாள்.நல்ல கவிதை எழுதும் போது அதே வார்த்தைகளை வேறு தொணியில் சொல்லுவாள்.
எப்போதும் என்னைப் பற்றியே சிந்தித்துக்கொண்டிருப்பாள் அவளைப் பற்றி நான் சிந்திக்கக்கூடாது என்பாள்.திடீர் என அழைத்து "மச்சி, உன் கல்யாணத்துல நான் தான் சாம்பார் ஊத்துவேன் "என்பாள்.பின்பு "இந்த வயசுல படிப்புத் தான் முக்கியம் நீ நல்லா படி உனக்கு நல்ல பொண்ணா நானே பாக்குறேன்" என்பாள்.
அப்பாவுக்கு பயந்த பொண்ணு "காதலிக்கிறவளாம் கையப் புடிச்சு சுத்துறா. நண்பன் கூட சேந்து நடக்க முடியல"என பெருமூச்சு விடுவாள்.
அவள் உதட்டைப் பிதுக்கி கட்டை விரலை பூமி நோக்கி வைத்து "ஊத்திக்கிச்சு " எனச் சொல்லுகையில் தோல்வி அவ்வளவு அழகாக இருக்கும். அவள் மிக இயல்பானவள் என்பதாலேயே இக்கட்டுரையில் எந்த வார்த்தை ஜாலங்களை கைக்கொள்ள முடியவில்லை.இவை எல்லாம் இன்னும் ஒரு வருடத்திற்குத் தான் கல்லூரி முடிந்தவுடன் அவளுக்கு திருமணம். கணவன் நல்லவனாய் இருந்தால் எப்போதாவது பேசலாம் இல்லை என்றால் அதுவும் முடியாது.ஆனால் ஒரு தேவதை போல் என்னை எப்போதும் ஆசிர்வதித்துக் கொண்டிருப்பாள் என்பது மட்டும் உறுதி.
Monday, November 21, 2011
விஜய்ணா உங்கள எனக்கு ரொம்ப புடிக்குங்க்ணா...

வயசு எல்லாம் சரியாகத் தெரியவில்லை. எனக்கு விவரம் தெரிந்ததில் இருந்து (ஒன்னாவது படிக்கும் போதுனு நினைக்கிறேன்) யாராவது நீ யார் ரசிகன் என்று கேட்டால்."இளைய தளபதி" எனக் காலரைத் தூக்கிவிட்டுச் சொல்வேன். அப்பொழுது நான் மட்டும் அல்ல எங்கள் ஊரில் உள்ள 12 பேர் விஜய் ரசிகர்கள் என்பதையும் தாண்டி விஜய் வெறியர்கள். அதே போல் ஒரு 8 பேர் கொண்ட அஜித் க்ரூப்பும் இருந்து வந்தது. எப்போதும் நாங்கள் முட்டிக் கொள்வது எல்லாம் இல்லை.ஆனால் எப்போதும் இரண்டு கேங்குக்கும் ஒரு கோல்ட் வார் நடந்து கொண்டிருக்கும். கிரிக்கெட் விளையாட்டில் இருந்து ஊரில் திருவிழாவுக்கு டான்ஸ் ஆடுவது வரை மறைமுகமாக குரோத நதி ஓடிக்கொண்டிருக்கும்.
விஜய், டி.வி.யில் பேசும் போது "எல்லோர் வீட்டில் இருக்கும் எனது குட்டி குட்டி நண்பர்களுக்கும்" என்பார். அவர் என்னைப் பார்த்து தான் பேசுகிறார் என நினைத்து பூரித்துப்போய் இருக்கிறேன். விஜய்க்காக நான் இழந்தது அதிகம். அதில் மிக முக்கியமான ஒன்றை மட்டும் சொல்லிவிட்டு இந்த கட்டுரை ஏன் எழுத வேண்டும் என நினைத்தேனோ அதை எழுத ஆரம்பித்திருக்கிறேன்.
முன்னமே நான் சொன்னது போல் எங்கள் ஊரில் சிறுவர்கள் தான் திருவிழாவுக்கு ஆடுவார்கள். அங்கே ஜிங்கிலி பிங்கிலி எல்லாம் இல்லை. மிகவும் டீசன்டான ஊர் என்பதால் அப்படி. வருடா வருடம் ஒரு பொண்ணு ஆடும் அந்த பொண்ணு பேரை மறந்துட்டேன்.அந்தப் பொண்ணுடன் ஆடுவதற்குத் தான் அதிகபட்சம் எல்லா பையன்களும் ஆசைப்படுவார்கள். ஆனால் அந்தப் பெண் எப்போது சோலோ டான்சே ஆடும். அந்த வருடம் மட்டும் அந்தப் பெண் ஒரு பையனுடன் சேர்ந்து ஆடப் போவதாகவும் அது நான் தான் என்றும், அவள் அம்மா வந்து சொன்னபோது உண்மையிலேயே நம்ப முடியவில்லை. நான் தான் அந்த வாரத்தின் ஸ்டார் ஆனேன். பலர் வயிர் எரிந்து செத்துக்கொண்டிருந்தார்கள். டான்ஸ் பிராக்டிஸ் நாள் வந்தது. லிட்டில் ஜானி படத்தில் இருந்து "பூவுக்குப் பொறந்த நாளாம்" பாட்டுக்கு ரிகர்சல் பண்ண ஆரம்பித்தோம். எல்லாம் அன்று மதியம் வரை நன்றாய் போய்க் கொண்டிருந்தது. மதியம் அவள் அம்மா இந்த பாட்டு வேணாம் புதுசா "பூக்காரா"னு பாட்டு வந்திருக்கு அந்த பாட்டுக்கு ஆடலாம் என்றார். முன்னாடி நாள் தான் சிட்டிசன் படப் பாட்டு ரிலிஸ் ஆகியிருந்தது என்பதால் எனக்கு என்ன படம் என்று தெரியவில்லை. யார் ஹீரோ என நான் கேட்ட போது. அஜித் என்றார். "நான் அஜித்து பாட்டுக்கு வரமாட்டேன்" என்றேன். "இல்லப்பா அந்த பாட்டு நல்லா இருக்கும் . கேட்டு பாரு" என்றார். அஜித் பாட்டைக் கேட்கக் கூடாது என்று சபதத்தில் கிளம்பி வந்துவிட்டேன். அதன் பிறகு ஒரு பையன் வீட்டுக்கு விருந்தாளியாய் வந்த பொண்ணைப் பிடித்து ( அவளை விட அழகு கம்மி தான்) "பூவுக்கு பொறந்த நாளாம்" அடினேன்.வேறு ஊருக்கு குடி போனபின் அந்த பொண்ணுக்கும் அவளுடன் பூக்காரா பாட்டுக்கு ஆடியவனுக்கும் இருதலைக் காதல் என்று +2 படிக்கையில் நண்பன் ஒருவன் சொன்னான். நான் ஆடி இருந்தால் எனக்கும் அவளுக்கும் காதல் மலர்ந்திருக்கலாம். அன்று மிஸ் பண்ணிய சான்சால் இன்று வரை நான் சிங்கிளாகவே சுத்திக் கொண்டிருக்கிறேன்.எல்லாம் எதற்காக எங்கள் இளைய தளபதிக்காக.
குஷி, ப்ரெண்ட்ஸ்,யூத் என தளபதி பொளந்து கட்டிக்கொண்டிருக்கும் போது அஜித் ராஜா மாதிரி மொக்கைப் படங்கள் கொடுத்துக் கொண்டிருந்தார். அதனால் அஜித் ரசிகர்கள் எல்லாம் அடங்கி இருந்தார்கள். செம அடாவடி பண்ணிக் கொண்டிருந்தேன். அப்போது தான் வந்தது புதிய கீதை. எனக்குப் படம் சுத்தமாக பிடிக்கவில்லை. ஏன் தளபதி லூசு மாதிரிக் கத்திக் கொண்டிருக்கிறார் எனத் தோன்றியது.இருந்தாலும் அடுத்த படம் நல்லாய் வரும் என்று நம்பிக்கையோடு காத்திருந்தேன்.நம்பிக்கையில் இடியென விழுந்தது திருமலை ரிலீஸ். அந்த திருவிழாவுக்கு "தாம் தக்க தீம் தக்க தய்ய தக்க கூத்து" ஆடியதால் படத்தை நான் ரொம்ப எதிர்பார்த்தேன். ஆனால் புதிய கீதையைவிட விஜய் ஏகத்துக்கும் கத்தினார். தியேட்டர் விட்டு வெளியே வரும்போது என்னைத் தவிர எல்லோரும் சந்தோஷமாக இருந்தார்கள். அந்த படம் தான் நான் விஜய் ரசிகனாய் நான் பார்த்த கடைசி படம். அடுத்து உதயா வந்தது. படு மொக்கை . அதிகாரப் பூர்வமாக விஜய் க்ரூப்பில் இருந்து விலகினேன்.அடுத்து கில்லி வந்தது. மதுர,திருப்பாச்சி, சிவகாசி என நடித்தார். ஹிட்டுகளும் ஆகின. ஆனாலும் என் கண் முன்னே " மேகமாய் வந்து போகிறேன்" எனப் பாடிய விஜயே கண்ணில் வந்து போனார். இது எனது தளபதி இல்லை. அவர் உருகி உருகி காதலிப்பார். எப்போதாவது சண்டை போடுவார். பஞ்ச் டயலாக் பேச மாட்டார். விஜயை எவ்வளவு எவ்வளவு நேசித்தேனோ அவ்வளவு வெறுக்க ஆரம்பித்தேன். விஜய் ரசிகன் கிடைத்தால் கலாசித் தள்ளுவதே பழக்கமாய் கொண்டேன்.
ஆனாலும் விஜயின் போக்கிரி அவரது மாஸைக் காட்டியது. ஆனால் அதன் பிறகு வந்த படங்கள் என்னை கொலைவெறி அடையச் செய்தன. சுறா அதன் உட்சபட்சம்.காவலனில் ஏதோ ட்ரை பண்ணியிருந்தாலும் பழைய ரேஞ்சை எனக்குத் தரவில்லை. வேலாயுதம் கதை என திருப்பாச்சி கதையைச் சொன்னதால் படத்தை பார்க்க ஆர்வம் இல்லை. அதிலும் பாகிஸ்தான் தீவிரவாதிகளிடம் இருந்து நாட்டைக் காப்பாற்றுகிறார் என மார் தட்டி அவர் ரசிகர்கள் சொல்வதை கேள்விப் பட்டதும் ஒரு கட்டிங்க் போட்டுவிட்டு விஜய் ரசிகர்களை எல்லாம் கடத்திக் கொண்டு வந்து கும்பிபாகம் பண்ணவேண்டும் என்று தோன்றியது. இதில் அவரது அரசியல் என்ட்ரி வேறு .அவரது அணில் வேலை இன்னும் எரிச்சல் கெளப்பியது.ஆனாலும் பழைய விஜயை பார்க்க வேண்டும் என்கிற ஆசை மட்டும் அடியில் ஒரு மூலையில் இருந்து கொண்டே இருக்கிறது. "பர்சியூட் ஆஃப் ஹாப்பினேஸ்" போல் ஒரு படத்தில் விஜயை பார்க்க வேண்டும் என்று அந்த படம் பார்க்கும் போதெல்லாம் தோன்றும். எனக்கு மிகவும் பிடித்த பத்து படங்கள் என்று கேட்டால் அதில் த்ரீ இடியட்ஸும் கண்டிப்பாக இருக்கும் . அதில் விஜய் நடிக்கிறார் என்றதும் ஒரு பயமும் அதோடு சேர்ந்து எனது ஆசை நிறைவேற வாய்ப்பு உள்ளது என்கிற மகிழ்ச்சியும் சேர்ந்து கொண்டது. இன்று காலை கூட விஜயின் வேட்டைக்காரனை கலாய்த்துக் கொண்டிருந்தேன். ஆனாலும் விஜயிடம் இதை சொல்ல வேண்டும் என்று இருக்கிறது ."விஜய்ணா உங்கள எனக்கு ரொம்ப புடிக்குங்க்ணா..."
Wednesday, October 5, 2011
சாமியும் பூச்சாண்டியும்....
கடவுள் இருக்கிறார் என்று சிலர் சொல்ல ஆரம்பித்தவுடனேயே கடவுள் இல்லை என்றும் சிலர் பேச ஆரம்பித்தார்கள்.இருக்கிறார்,இல்லை,இருந்தாலும் இருக்கிறார் என்பதற்கு ஆதாரம் இல்லை.இல்லை என்பதற்கு ஆதாரம் போதுமானதாய் இல்லை.இப்படி நிறைய குழப்பமான வாதங்களுடன் கமலஹாசன் படம் போல் புரியாதவராகவே கடவுள் இருக்கிறார் கடவுள்.
எல்லா குழந்தைகளைப் போல் நானும் பிறக்கும் போது நாத்திகனே. வளரும் போது பெரும்பாலும் குழந்தைகள் ஆத்திகனாகிவிடும் ஆனாலும் வீட்டுச் சூழல் காரணமாக நாத்திகனாகவே நான் வளர்ந்தேன். கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள், முக்கியமாக பூசாரிகள், ஜோசியக்காரர்கள் எல்லாம் ஏமாற்றுக்காரர்கள் என்று நானே நினைத்துக் கொள்வேன்.எப்போதும் மற்றவர்களை வித்தியாசமாய் காட்டிக் கொள்ள விரும்பும் என் குணம் நாத்திகத்தை கெட்டியாக பிடித்துக் கொண்டது.
நான் நான்காவது படிக்கையில் மியூசிக் என்றொரு பாடமும் அதற்கு பரிட்ச்சையும் கூட இருந்தது. பெரும்பாலும் சமஸ்கிருத பாடல்கள்."சுக்லாம் பரதர விஷ்னு" மாதிரி. ஒன்றிரண்டு தமிழ் பாடல்கள் இருக்கும் "பாலும் தெளி தேனும்" மாதிரி. தமிழ் பாடல்களை மாணவர்கள் எளிதாய் பாடி விடுவதால் சமஸ்கிருத பாடலையே பரிட்சையில் பாடச் சொல்லுவார்கள். தீவிரமாக நாத்திகத்துள் இருந்த நான் எனது நாத்திகத்தை அந்த ஆசிரியைக்கு உணர்த்தும் பொருட்டு. "நான் சாமி பாட்டெல்லாம் பாடமாட்டேன் .வேணும்னா பாரதியார் பாட்டு பாடுறேன்" எனச் சொல்லி 'அக்னி குஞ்சு ஒன்று கண்டேன் ' பாடினேன்.(முந்தைய இரவு தான் அப்பா அந்த பாடலை சொல்லிக் கொடுத்தார்). ஆசிரியை எவ்வளவோ சொல்லியும் நான் மறுத்ததால். பள்ளி ஆசிரியர்கள் மத்தியில் 'நாத்திகன்' என்று அன்றே மனதில் பதிந்து போனேன்.அடுத்தநாள் பள்ளி முதல்வரிடம் அழைத்துச் செல்லப்படேன்."அவனுக்கு அந்த பாட்டு தெரியாததுனால தான் அவன் பாடல" என்று முந்தைய நாள் என்னை பாடச் சொன்ன ஆசிரியரிடம் சொல்லிக் கொண்டிருந்தார் முதல்வர்.உடனே நான் எல்லா பாடல்களையும் பாடி முடிக்க "எப்படி பாட வச்சேன் பாத்தியா" என்று என்னை பார்த்து சொன்ன பிரின்ஸ்பலை ஓங்கி தலையில் கொட்டு கொட்டுனு கொட்டலாமா என்று தோன்றியது.ஏமாற்றப் பட்டோம் எனத் தெரிந்ததும் கண்ணில் தண்ணீர் முட்டிக் கொண்டு வந்தது. அவர் மேல் இருந்த கோபம் ஒட்டு மொத்த ஆத்திகர்கள் மேல் திரும்பியது.என்னை நிறைய தி.க நூல்கள் படிக்க வைத்தது. யாராவது திரு நீறு,குங்குமம், வைத்துக் கொண்டு வந்தால் அவர்களை வம்புக்கிழுத்து கடவுள் இல்லை என்று நிறைய வாதங்கள் வைத்து அவர்கள் பேசமுடியாமல் திணறுவதைப் பார்த்து இரசிக்க ஆரம்பித்தேன்.
இந்த சமயத்தில் தான் கிறித்துவைப் பற்றி என்னிடம் பேசினார் ஒருவர். ஏசுவை எதிர்த்து பேச எந்த பாயின்டும் இல்லாததால் ஏசு தான் கடவுள் என்று நம்பி ஞாயிறு தோறும் சர்ச் செல்ல ஆரம்பித்தேன்.எனது அப்பா என்னை தடுக்கவில்லை.ஏசுவை பற்றி அவரிடம் சொல்லுகையிலும் அவர் எதிர்வாதம் பண்ணவில்லை.ஒரு வேளை அவர் அப்படி செய்திருந்தால் தீவிர கிறித்துவனாய் ஆகிருப்பேன்.மார்க்சியம் வாசிக்க ஆரம்பித்த காலம் அதுதான். ஒரு நாத்திகனான என்னை பகுத்தறிவாளனாய் ஆக்கியது. பின்பு யாராவது திருநீறும் குங்குமமும் வைத்திருப்பதைப் பார்த்தால் பரிதாபம் தோன்றியது. எங்கள் ஊரில் கோயில் வேண்டும் என மக்கள் போரடும்போது அப்பா ஆதரவு அளித்தது ஆச்சரியமூட்டியது.அதற்கு அவர் தந்த விளக்கம்."நாத்திகம் என்பது திணிக்கப்படக்கூடாது . மக்களே தெளிந்து வரவேண்டும். சாமியை வணங்காமல் இருப்பதற்கு நமக்கு இருக்கும் உரிமை வணங்குவதற்கும் அவர்களுக்கு இருக்கிறது. " இந்நிகழ்வுக்குப் பிறகு ஆத்திகர்களின் மீதான எனது பார்வை மாறி இருந்தது.
தினமும் குடித்து ஊர் வம்பிழுக்கும் அழகர் மாமா ஐய்யப்பனுக்கு மாலை போடும் போது மட்டும் ஒரு மாதம் குடிக்காமல் இருப்பார். எப்போதும் யாருடனும் பேசுவதற்கு கூச்சப்படும் பஞ்சம்மா சித்தி தீச்சட்டி எடுத்து வரும்போது போடும் ஆட்டம் செமத்தியானது.சீனி மிட்டாய், ஜவ்வு மிட்டாய் , தேனு மிட்டாய் போன்றவைகளை செய்து விற்கும் ஒரு பாட்டி திருவிழா காலத்தில் மட்டுமே கை நிறைய காசு பார்ப்பார். நேற்று கூட சென்ட்ரலில் இருந்து பூங்காவிற்கு போகும் சுரங்க பாதைக்கு அருகே அனுமார் படம் வரைந்து காசு வாங்கிக்கொண்டிருந்தார் ஒருவர். அண்ணன் போட்ட காசை எல்லாம் பாதி மாதத்திலேயே செலவு செய்துவிட்டு மீதி நாட்களில் ஒரு வேளை மட்டுமே சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது வீட்டு ஓனர் பொண்ணு வந்து 'சாமிக்கு படைத்தது' என்று தட்டு நிறைய பலகாரங்கள் வைத்து விட்டு போகும்.கார்பரேட் சாமியார்களுக்கு உதவும் கடவுள்( என்கிற கருத்து )மேல் சொன்னவைகளுக்கும் உதவும் போது அது மேல் இருக்கும் கோபம் குறைகிறது.
ஐன்ஸ்டீன் சொன்ன இதை எல்லா நாத்திகர்களும் பயன் படுத்திவிட்டார்கள் என்றாலும் இங்கே தேவைப் படுவதால் நானும் பயன்படுத்த வேண்டியுள்ளது."கடவுள் என்று இருப்பதாக எனக்குத் தெரியவில்லை .ஆனால் கடவுள் இருக்கிறார் என்கிற நம்பிக்கை தான் பலரை மனிதர்களாகவே வைத்து இருக்கிறது". சில மனிதர்களை கடவுள் காட்டிதான் நல்லவனாக்க வேண்டியிருக்கிறது எனும் பட்சத்தில் சாப்பிடாத குழந்தைகளை சாப்பிடவைக்க பயன்படும் பூச்சாண்டியைப் போலாவது கடவுளின் தேவை நமக்கிருக்கிறது. ஆனால் கடவுள் இல்லை எனச் சொல்லும் பெரும்பாலன மனிதர்கள் பூச்சாண்டி இல்லாமலேயே சாப்பிடும் குழந்தைகளாய் இருக்கிறார்கள். அந்த குழந்தைகள் சமத்து என்றாலும் அதற்காக பூச்சாண்டிக்காய் சாப்பிடும் குழந்தையை குற்றம் சொல்ல முடியாது.

Subscribe to:
Posts (Atom)