Fish

Thursday, August 25, 2011

மது கவிதை


1.காலியாகும்
ஒவ்வொரு கோப்பையிலும்
நிரப்பப்படுகிறது மரணம்.

2.சரக்குடன் தண்ணீர்
கலப்பது போல்
அன்புடை நெஞ்சம் கலந்தனவே

3.போதை தரும் இன்பத்தை
மிஞ்சுகிறது
இன்பம் தரும் போதை.

4.குடி குடியைக் காக்கும்
மதுவிற்பனையாளன்.

5. மது வாங்கும் காசை
மடித்துக் கொடுங்கள்
காந்தி இருக்கிறார்.

6.மனிதன் கொஞ்சம் மதுவை ருசிக்கிறான்.
மதுவும் கொஞ்சம் மனிதனை ருசிக்கிறது.

0 comments:

Post a Comment